விடியல் ஆட்சியிலும் விடிவு கிடைக்காமல் தாயகம் திரும்பிய தமிழர்கள் பரிதவிப்பு
'விடியல்' ஆட்சியிலும் 'விடிவு' கிடைக்காமல்தாயகம் திரும்பிய தமிழர்கள் பரிதவிப்புஈரோடு, நவ. 5-ஈரோடு அருகே பவானி சாலை, பெருமாள்மலை அடி வாரத்தில் குடியிருக்கும், தாயகம் திரும்பிய தமிழர்கள், 200க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து தாயகம் திரும்பிய தமிழர்கள், பட்டியல் இன மக்கள், கூலி தொழிலாளர் என, 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சூரியம்பாளையம் கிராமம், பெருமாள்மலை அடிவாரத்தில், 40 ஆண்டுக்கும் மேலாக வசிக்கிறோம். இங்கு ஒரு பகுதி வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு வழங்கி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். பிற வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி இல்லை. ஆரம்பத்தில் இந்நிலம் தனி நபருக்கானது என்றும், பின் வருவாய் துறை ஆவணங்களில் அவ்வாறு இல்லை என்றும், தற்போது அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்றும் கூறி, எங்களை அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர்.இவ்விடத்தில் தொடர்ந்து வசிக்க, அறநிலையத்துறை இடத்தை வாடகைக்கு வசிப்பதாக ஒப்பந்தம் ஏற்படுத்துமாறு சில அதிகாரிகளும், இன்னும் சிலர் இடத்தை விட்டு அகல வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.இந்த இடத்திலேயே நாங்கள் வீடு கட்டி வசிக்கும் வகையில், வீட்டுமனையாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.