உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாலத்தில் சிக்கிய டிப்பர் லாரி

பாலத்தில் சிக்கிய டிப்பர் லாரி

பு.புளியம்பட்டி;புன்செய்புளியம்பட்டி நகராட்சி இந்திரா நகர் பகுதியில், பிரதான சாலையில் இருந்து, இணைப்பு சாலை வழியாக குடியிருப்புகளுக்கு செல்ல சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திரா நகர் நான்காவது வீதியில் கட்டப்படும் வீட்டுக்கு மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி நேற்று மதியம் வந்தது. இணைப்பு சாலை வழியாக சிறு பாலத்தின் மீது சென்ற போது பாரம் தாங்காமல் சிறு பாலம் உடைந்தது. இதனால் பின் சக்கரங்கள் பாலத்தில் சிக்கி இடிபாடுகளுக்குள் இறங்கி நின்றது. மணலை பொக்லைன் மூலம் அகற்றிய பிறகு டிப்பர் லாரி மீட்கப்பட்டது. இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்லும் சாலையில், அதிக எடை கொண்ட டிப்பர் லாரி பயணித்ததால், பாரம் தாங்காமல் பாலம் சேதமடைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை