உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ரயில் டிரைவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் குற்ற நடவடிக்கை, தண்டனைகளை உடனே நிறுத்த வேண்டும். அடிப்படை உரிமைகளான வேலை நேரம், ஓய்வு மற்றும் இரவு பணிகளை பாதுகாப்பு விதிகளின்படி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய ரயில் டிரைவர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார். முன்னதாக ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் ரயில் டிரைவர்கள் அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு பிளாட்பார்ம் எண், 1, 2 வழியே சென்று ரயில் டிரைவர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை