மேலும் செய்திகள்
ரயில் மோதி முதியவர் பலி
08-Aug-2024
ஈரோடு: ஊஞ்சலுார்-கொடுமுடி இடையே தண்டவாளத்தில் கடந்த, 25ம் தேதி காலை, 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அஜாக்கிரதையாக ரயில்பாதையை கடந்தபோது ரயிலில் அடி-பட்டு பலியானதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர் பருமனான உடல். வட்ட முகம். என்.எஸ்.கே. ப்ளூ கலர் பாக்கெட் ஜட்டி, ப்ளு-பி-ரவுன் கலர் கலந்த கட்டம் போட்ட லுங்கி, ப்ளு-வெள்ளை கலர் கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்தார்.இடது மார்புக்கு மேல் ஒரு மச்சம், வலது கை மணிகட்டில் சிவப்பு கயிறு கட்டப்பட்டுள்ளது. வயிற்றின் வலது பக்கம் ஒரு கருப்பு மச்சம் உள்ளது. தகவல் அறிந்தால் 0424-2255177, 94981-01965, 94981-08028 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்-ளலாம்.
08-Aug-2024