மேலும் செய்திகள்
கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
06-Feb-2026
ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டத் தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குருநா தன் தலைமை வகித்தார்.வருவாய் துறை கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியம், 15,700 ரூபாய் வழங்க வேண்டும். இறந்த மற்றும் பணி ஓய்வு பெற்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., இறுதி தொகையை அரசு பங்களிப்பு தொகையுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர் வேலை நிறுத்தத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள், திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
06-Feb-2026