உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 113 கேமராக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

113 கேமராக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறிய, பல்வேறு இடங்களில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், போலீஸ் மூலமும் தனியார் பங்களிப்புடன், 1,600க்கும் மேற்பட்ட கேமராக்கள் நிறுவப்பட்டு, எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகரில் கூடுதலாக, 150 கேமராக்கள் நிறுவப்பட்டதில், 37 செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதி கேமராக்களை, செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ