உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர் நியமனம்

இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர் நியமனம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில், தேர்தல் ஆணைய இணையதளம் மூலம், கணினி சுழற்சி முறையில் முதற்கட்ட பணி ஒதுக்கீடு நேற்று செய்யப்பட்டது. தொகுதியில், 237 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 20 சத-வீதம் என சேர்த்து, 284 ஓட்டுச்சாவடியாக கணக்கில் கொள்ளப்ப-டுகிறது. இதற்காக தலா, 284 முதன்மை அலுவலர், முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களை கொண்ட ஓட்டுச்சாவடிகளுக்கு கூடுத-லாக, 58 நான்காம் நிலை அலுவலர்கள் என, 1,194 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு வரும், 19ல் ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம்.கலை மற்றும் அறி-வியல் கல்லுாரியில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணி தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !