வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ரேஷன் முறை ஒழிக்கபட வேண்டும். பணமாக கொடுங்கள்
ஈரோடு, அரச்சலுார் அடுத்த கொமராபாளையம் பகுதியில், ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை அதிக விலைக்கு, வட மாநிலத்தவர்களுக்கு விற்க எடுத்து செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அரச்சலுாரை சேர்ந்த ஆம்னி டிரைவர் சதீஷ் குமார், 38, என்பவரை கைது செய்தனர். ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்ற கடத்தி செல்வதை ஒப்பு கொண்டார். மாருதி ஆம்னி, ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, சதீஷ் குமாரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
ரேஷன் முறை ஒழிக்கபட வேண்டும். பணமாக கொடுங்கள்