121வது பிறந்தநாள் விழா; தியாகி குமரனுக்கு மரியாதை
சென்னிமலை: விடுதலை போரில் ஈடுபட்டு கொடிகாத்த மாவீரன் என போற்றப்பட்ட தியாகி குமரனின் பிறந்த ஊரான சென்னிமலையில், 121வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் சென்னிமலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ென்னிமலை ஒன்றிய பா.ஜ., சார்பாக, நிர்வாகிகள் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர் பிறந்த இல்லத்துக்கு சென்று அவரது போட்டோவுக்கு மரியாதை செலுத்தினர். ஒன்றிய தலைவர் சந்திரசேகர், பொதுச்செயலாளர் சுந்தரராசு, வசந்தகுமார், தமிழரசன், கோபிநாத், மூர்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் ஞானவேல் மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதேபோல் தி.மு.க., சார்பாக ஒன்றிய செயலாளர்கள் தமிழ்செல்வன், பிரபு; அ.தி.மு.க., சார்பாக முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நடராஜ், தென்னரசு; தமாகா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதேபோல் கொமதேக பாலு தலைமையிலும், கொடிகாத்த தியாகி குமரன் பேரவை தலைவர் ஐயப்பன் தலைமையிலும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.* சிவகிரியில் உள்ள குமரன் உருவச்சிலைக்கு கொடுமுடி பேரூராட்சி மன்ற தலைவர் திலகவதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.