மேலும் செய்திகள்
பட்டபகலில் வியாபாரியிடம் 2.5 கிலோ நகை கொள்ளை
27-Sep-2024
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், கதவை தாழ்ப்பாள் போடாமல் துாங்கிய மூதாட்டியின் வீட்டின் கதவை திறந்து, தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.புன்செய்புளியம்பட்டி, தோட்டசாலையை சேர்ந்தவர் சரோஜினி, 72. இவரது மகன் ராஜசேகர் வெளியூரில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், தனது மருமகளுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மருமகள் அவரது தாய் ஊருக்கு சென்ற நிலையில், சரோஜினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, சரோஜினி வீட்டின் கதவை தாழ்ப்பாழ் போடாமல் துாங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வந்த மர்ம நபர் வீட்டின் கதவை திறந்து, பீரோவில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருடிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த சரோஜினி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பினார். புன்செய்புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பீரோவில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம் என, 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையன் திருடி சென்று விட்டதாக போலீசாரிடம் சரோஜினி தெரிவித்துள்ளார்.
27-Sep-2024