உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊ.வ.து., அலுவலர்கள் மறியல் 145 பேர் கைது

ஊ.வ.து., அலுவலர்கள் மறியல் 145 பேர் கைது

ஈரோடு,:தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஈரோடு, தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஆர்ப்பாட்டத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.காலியாக உள்ள பஞ்., செயலர் பணியிடங்கள் உட்பட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நுாறு நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்கள், எஸ்.பி.எம்., திட்ட ஒருங்கிணைப்பாளர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும். அத்திட்டத்துக்கு தனி ஊழியர் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடு பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். டவுன் பஞ்., - நகராட்சிகளுடன் பஞ்.,களை இணைக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதை தொடர்ந்து திருமகன் ஈவெரா சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற, 58 பெண் அலுவலர்கள் உட்பட, 145 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி