உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,505 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல்

1,505 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஈரோடு: பர்கூரில் விற்பனைக்கு டூவீலரில் கொண்டு சென்ற, 1,505 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பர்கூரில் இருந்து, அந்தியூர் செல்லும் சாலையில் தாமரைக்கரை பஸ் ஸ்டாப் அருகில், பர்கூர் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த ஹோண்டா ஆக்டிவாவை மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பையில் ஹான்ஸ், 225 பாக்கெட், கூல் லீப், 80 பாக்கெட், விமல் பான் மசாலா, 600 பாக்கெட், வி-1 புகையிலை, 600 பாக்கெட் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹோண்டா ஆக்டிவாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டூவீலர் ஓட்டி வந்த அந்தியூர் சங்கராபாளையம் பர்கூர் மெயின் ரோட்டை சேர்ந்த சம்பத் குமார், 50, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை