மேலும் செய்திகள்
திம்பம் மலைப்பாதையை கடந்து சென்ற சிறுத்தை
17-Oct-2024
சத்தியமங்கலம், நவ. 2-கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த, பெண்கள் உட்பட, 21 பேர், ஒரு துக்க காரியத்தில் பங்கேற்க, டிராவலர் வேனில் கர்நாடக மாநிலம் நொக்கனுார் சென்றனர். நிகழ்வு முடிந்து ஊர் திரும்பினர். திம்பம் மலைப்பாதை வழியாக நேற்றிரவு வந்தபோது, ௧௪வது கொண்டை ஊசி வளைவில், பிரேக் பிடிக்காமல், சாலையோர தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது.இதில் ஆண், பெண்கள் என, ௧௭ பேர் பலத்த காயம் அடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Oct-2024