உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 175 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 175 மனுக்கள் ஏற்பு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, கருணை அடிப்படை பணி, வீட்டுமனை பட்டா என, 175 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.கட்டுமான தொழிலாளர்கள் மூன்று பேருக்கு, வீட்டு வசதி திட்டத்தில் சொந்த நிலத்தில் வீடு கட்ட, தலா, 4 லட்சம் ரூபாய்; 18 பயனாளிகளுக்கு, 34.30 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணை உட்பட, 31 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி