உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

டூவீலரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

சத்தியமங்கலம், டிச. 8-தாளவாடி போலீசார் அருள்வாடி பகுதியில் நேற்று காலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் வேகமாக ஓட்டி சென்றனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர்.தாளவாடி, தொட்டகாஜனுாரை சேர்ந்த சீனிவாசன், 48; மைசூரு, சாம்ராஜ் நகரை சேர்ந்த முஜீப் அகமது, 44, என்பது தெரிந்தது. இருவரும் பைக்கில் வைத்திருந்த, 220 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை