UPDATED : ஏப் 27, 2026 06:30 AM | ADDED : ஏப் 27, 2026 03:59 AM
ஈரோடு:ஈரோடு
ஆணைக்கல்பாளையம் பூந்துறை சாலையில், மளிகை கடை வைத்திருப்பவர்
ஈஸ்வரமூர்த்தி, 47, பா.ஜ., முன்னாள் நிர்வாகி. கடந்த, 9ம் தேதி இரவு
கடைக்குள் புகுந்த இருவர், 15 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.
புகாரின்படி தாலுகா போலீசார் ஆசாமிகளை தேடி வந்தனர்.இந்நிலையில்
கடையில் திருடிய சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் அ.சமுத்திரம் பகுதி
ராஜா, 30; திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை தமிழ்செல்வன், 26,
ஆகியோரை கைதுசெய்தனர்.இதில் ராஜா மீது பள்ளிபாளையம், தர்மபுரி போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்கு உள்ளது.