உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவையில் மொபட் திருடிய 2 பேர் கைது

கோவையில் மொபட் திருடிய 2 பேர் கைது

சேலம், சேலம், புது பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் பள்ளப்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது டி.வி.எஸ்., மொபட்டில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். சந்தேகம் இருந்ததால், வண்டி எண்ணை வைத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, மொபட்டின் உரிமையாளர், அவரது மொபட் கடந்த, 12ல் திருடுபோனதாக தெரிவித்தார். கோவை, சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.இதனால் பள்ளப்பட்டி போலீசார் விசாரித்ததில், கோவை மாவட்டம் விளாங்குறிச்சி, பாலாஜி நகரை சேர்ந்த கலைவானன், 35, ஆவாரம்பாளையம், பட்டாளம்மன் கோவில் தெரு வடிவேல், 34, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின் சரவணம்பட்டி போலீசார், இருவரையும் நேற்று அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை