உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒயர் திருடிய 2 பேர் கைது

ஒயர் திருடிய 2 பேர் கைது

ஈரோடு:ஈரோடு மேட்டூர் சாலையில், பஸ் ஸ்டாண்ட் அருகே பழைய கட்டடத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், கட்டுமானத்துக்கு தேவையான உபகரணங்களை, ஒரு அறையில் வைத்துள்ளனர். நிறுவன பொறியாளர் சபரிநாதன், வெளியூர் சென்றுவிட்டு பணிக்கு திரும்பினார். பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 80,000 ரூபாய் மதிப்பிலான ஒயர் திருட்டு போனது தெரியவந்தது. அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.இது தொடர்பாக ஈரோடு கருங்கல்பாளையம், கமலா நகர் ஜீவா, 22; கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதி ஜீவானந்தம், 21, ஆகியோரை நேற்று கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் ஒயர்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை