மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
24-Apr-2025
ஈரோடு::பெருந்துறை, தோப்புபாளையம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் ரகு, 29; தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர். திருமணம் ஆனவர். மனைவி வெளி மாநிலத்தில் ஆயுர்வேத பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஈரோடு, செங்கோடம்பள்ளம், மாருதி நகரை சேர்ந்தவர் வைஷ்ணவி, 24; இருவரும் பேசி பழகி வந்தனர்.கடந்த மார்ச், 13ல் வைஷ்ணவி வீட்டுக்கு சென்றார். அங்கு ரகுவுக்கு தெரிந்த திருச்செங்கோட்டை சேர்ந்த சுனிதா இருந்தார். மூவரும் பேசி கொண்டிருந்த போது நான்கு பேர் வந்தனர். ரகுவை தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியும், 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக வைஷ்ணவி, கார் டிரைவர் மெய்யரசன், 23, ஆகியோரை கைது செய்து, மேலும் சிலரை தேடி வந்தனர். இந்த விவகாரத்தில் சேலம், கிச்சிபாளையத்தை சேர்ந்த பாலகண்ணன், 39, கார்த்திகேயன், 20, ஆகியோரை கைது செய்தனர்.
24-Apr-2025