மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
03-Aug-2026
ஈரோடு:கேரள மாநிலம் கண்ணுாரை சேர்ந்த கோட்டுகுமார் மகன் ஆதர்ஸ், 30. மொடக்குறிச்சி சின்னியம்பாளையம் அம்மன் நகர் வடிவேல் மகன் ஹரிஷ், 26. இருவரும், 3.5 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தபோது, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என, ஈரோடு எஸ்.பி., வாயிலாக கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.கலெக்டர் கந்தசாமி பரிசீலனை செய்து, இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
03-Aug-2026