மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி கைது
13-Jul-2026
பவானி:பவானி கூடுதுறை ஐயப்பா சேவா மண்டபம், காவிரி ஆற்று படித்துறையில், கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நடமாடிய சித்தோடு கிருஷ்ணமூர்த்தி, 26; காஞ்சிகோவில் பெத்தாம்பாளையம் தர்மராஜ், 38, ஆகியோரிடம் சோதனை செய்ததில், 4.50 கிலோ கஞ்சா இருந்தது. இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
13-Jul-2026