உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.௬௨ கோடி மோசடி செய்த ௨ நிறுவனம் பாதிக்கப்பட்ட ௩௪௫ பேர் இதுவரை புகார்

ரூ.௬௨ கோடி மோசடி செய்த ௨ நிறுவனம் பாதிக்கப்பட்ட ௩௪௫ பேர் இதுவரை புகார்

ரூ.௬௨ கோடி மோசடி செய்த ௨ நிறுவனம்பாதிக்கப்பட்ட ௩௪௫ பேர் இதுவரை புகார்ஈரோடு, நவ. 29-ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில், 62 கோடி ரூபாய் வரை முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்டதாக, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், 345 பேர் புகாரளித்துள்ளனர்.ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம், நசியனுார் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பார்ம்ஸ் நிறுவனம், 2017ல் துவங்கப்பட்டது. நிறுவன நிர்வாக இயக்குனராக ஈரோடு, இடையன்காட்டு வலசு, சின்னமுத்து முதல் வீதியை சேர்ந்த சண்முகம் மகன் நவீன்குமார், 38, செயல்பட்டார். பல்வேறு கவர்ச்சி விளம்பரங்களை செய்ததால், முன்னாள் ராணுவத்தினர், மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பணத்தை முதலீடு செய்தனர். இரு தவணை மட்டும் பணத்தை கொடுத்த நிலையில் நிறுவனம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களில் எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தனர்.ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர். விசாரணையில் பல கோடி ரூபாய்க்கு மோசடி நடந்ததை உறுதி செய்தனர். இதனால் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. தற்போது வரை இரு மோசடி நிறுவனங்களிலும், 62 கோடி ரூபாய் வரை முதலீடு செலுத்தி பாதிக்கப்பட்டதாக, 345 பேர் புகாரளித்துள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை