| ADDED : ஜன 11, 2024 11:18 AM
பவானி: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே இ.பி., அலுவலக சாலையை சேர்ந்தவர் ரங்கராஜ்குமார், 42. ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர் நேற்று காலை, 11:00 மணிக்கு சித்தோடு, ஓடக்காட்டில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே, 'குடி'போதையில் குடும்ப பிரச்னை தொடர்பாக மொபைல் போனில் தகாத வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு, பள்ளபாளையம், கீழ்கரட்டுப்பாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி அசோக், 27, வாய்க்கால்மேடு, கவுண்டன்பாளையத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி நல்லமுத்து, 40, ஆகியோர், போதையில் நின்றிருந்தனர். அவர்களை ரங்கராஜ்குமார் திட்டியதாக கருதியுள்ளனர். இதனால் அந்த இருவரும், ரங்கராஜ்குமாரிடம் தகராறு செய்துள்ளனர்.அதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அசோக், கட்டையால் ரங்கராஜ்குமார் தலையில் தாக்கினார். அதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.சித்தோடு போலீசார், உடலை கைப்பற்றி, அசோக், நல்லமுத்துவை கைது செய்தனர்.