குட்கா விற்ற 2 பேர் கைது
ஈரோடு: ஈரோடு அருகே பூந்துறை சாலையில், எஸ்.ஏ.மளிகை ஸ்டோரில், ஈரோடு தாலுகா போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில, ௨௦ பாக்கெட் ஹான்ஸ், கூல் லிப், 10 பாக்கெட் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான சாகுலை கைது செய்தனர்.இதேபோல் ஈரோடு திருநகர் காலனியில், திருப்பதி மளிகை கடையில், ஹான்ஸ், விமல் பான் மசாலாவை பறிமுதல் செய்த கருங்கல்பாளையம் போலீசார், கடை உரிமையாளரான திருப்பதியை கைது செய்தனர்.