ஏரியில் மூழ்கி 2 பேர் பலி
வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே, ஏரியில் மூழ்கி இருவர் பலியாயினர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர் நிதிஷ், 11. இந்திரா நகரை சேர்ந்த டீக்கடை தொழிலாளி இர்பான், 20. இவர்கள் நேற்று மாலை, 4:00 மணியளவில், அருகே உள்ள லாலா ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. வாணியம்பாடி தீயணைப்பு துறையினர் வந்து, ஏரியில் இறங்கி தேடி, இருவரது சடலத்தையும் மீட்டனர்.வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.