மேலும் செய்திகள்
மொபைல் பறித்த 2 பேர் கைது
25-Sep-2024
வியாபாரி உள்பட ௨ பேர் மாயம்ஈரோடு, அக். 19-ஈரோடு, மூலப்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 49; ஜவுளி தொழிலில் இடைத்தரகராக இருந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 16ம் தேதி அதிகாலை ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. ஈரோடு காசியண்ண கவுண்டர் வீதியில் உள்ள ஒரு கடை முன் அவரது மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. மொபட்டில் அவருடைய இரு மொபைல்போன், சாவி இருந்தது. அவரின் மனைவி சவுமியா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.* தர்புமரி மாவட்டம் அரூர், நீரப்பன் குப்பத்தை சேர்ந்த குமார் மகள் பிரியதர்ஷினி, 19; ஈரோட்டில் தனியார் விடுதியில் தங்கி, பாரத் சேவா சமாஜ் படிப்பை படித்து வந்தார். கடந்த, 15ம் தேதி மாலை சாப்பிட செல்வதாக, விடுதியில் இருந்து சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. விடுதி வார்டன் மூலம் தகவல் அறிந்து, தந்தை குமார் கொடுத்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்,
25-Sep-2024