மேலும் செய்திகள்
12 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
24-Sep-2026
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் தோப்பூரை சேர்ந்தவர் ஜெகதீசன், 46; பவானிசாகர் பேரூராட்சி துாய்மை பணியாளர். கடந்த, 15ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மனைவி புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.* சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் குளத்துபிரிவை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் பைனான்ஸில் வசூல் பிரிவு ஊழியர். இவரின் மனைவி ரம்யா, 23; தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. தாய் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற ரம்யா வீடு திரும்பவில்லை. கார்த்திக் புகாரின்படி சத்தியமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.
24-Sep-2026