உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 20 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம்

20 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி நிறைவு பெற்று, கடந்த பிப்., 23ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தீவிர சிறப்பு திருத்தப்பணியின் ஒரு பகுதியாக, 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, துணை ஓட்டுச்சாவடி அமைத்தல், ஓட்டுச்சாவடி இடமாற்றம் செய்தல், ஓட்டுச்சாவடி கட்டடம் மாற்றுதல் போன்ற பணி மேற்கொள்ளப்பட்டது.இதன்படி ஈரோடு மேற்கில், 12, பெருந்துறையில்-1, பவானி-5, அந்தியூர்-1, பவானிசாகர்-1 என, 20 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு-4, பவானி-4, அந்தியூர்-2, கோபி-2 என, 12 ஓட்டுச்சாவடிகள் கட்டிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு-8, கோபி-11 என, 19 ஓட்டுச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை