உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 20 கிலோ எடை கொண்ட கடல் பாறை மீன்

20 கிலோ எடை கொண்ட கடல் பாறை மீன்

ஈரோடு : ஈரோடு, இ.வி.என்.சாலை ஸ்டோனி ப்ரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் ஒரு கடைக்கு, துாத்துக்குடியில் இருந்து அரிய வகையான கடல் பாறை மீன் நேற்று வந்தது. ஒரு மீன், 20 கிலோ எடை கொண்டதாக இருந்தது. கிலோ, 750 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆர்டரின் பேரில் இதை ஒருவரே வாங்கி சென்றார். இதில் முள் இருக்காது என்பது சிறப்பம்சம். தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த மீனை, கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், மொபைல்போனில் படம் பிடித்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி