சித்தோடு அருகே குடோனில் 200 கிலோ குட்கா பறிமுதல்
பவானி, சித்தோடு அருகே கங்காபுரத்தில் குடோனில் பதுக்கி வைத்து, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதகாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் போனது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், குடோனில் ஆய்வு செய்தனர். மூட்டையாக, 200 கிலோ அளவில், ஹான்ஸ், புகையிலை பொருட்கள் இருந்தன. அங்கிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரை பிடித்தனர். பெங்களூரில் இருந்து வாங்கி வந்து, குடோனில் வைத்து விற்பதாக தெரிவித்தனர். 'குட்கா' பொருட்கள் மற்றும் கார், பைக்குகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.