பட்டாசு குப்பையை அகற்ற 200 துப்புரவு பணியாளர்கள்
ஈரோடு:தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் குப்பை குவியும். ஆண்டுதோறும் பட்டாசு, மத்தாப்பு குப்பை டன் கணக்கில் சேருகிறது. இவற்றை உடனடியாக சாலைகளில் இருந்து சுத்தம் செய்ய, மாநகராட்சியில் மண்டலம் வாரியாக நான்கு மண்டலத்துக்கும் தலா, 50 ஊழியர்கள் என, 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை கண்காணிக்க, மண்டலத்துக்கு தலா இரு சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலத்துக்கு தலா இரு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை, நாளை (9ம் தேதி) துப்புரவு பணியாளர்கள் மேற்கொள்வர்.