உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டுப்பதிவு நாளில் 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்

ஓட்டுப்பதிவு நாளில் 2,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் ஓட்டுப்பதிவு தினத்தில், போலீசார் உள்பட, 2,௦௦௦ பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி என மூன்று லோக்சபா தொகுதிகளுக்கான பகுதி வருகிறது. இந்நிலையில் ஓட்டுப்பதிவு நாளில், மாவட்டத்தில், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.இதுபற்றி போலீசார் கூறியதாவது: தேர்தல் ஓட்டுப்பதிவு தினமான ஏப்.,19ல் போலீசார், ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், தீயணைப்பு வீரர்கள், சிறை துறையினர் என, 2,௦௦௦ பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 75 ஆயுதப்படை போலீசார், போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்வர். மீதி ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் வைக்கப்படுவர். உணவு சப்ளை, உணவு பேக்கிங் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இது தவிர தேவையான அளவு பட்டாலியன் போலீசார் பணிக்கு அழைக்கப்படுவர். மேலும், 720 துணை ராணுவத்தினர், ஓட்டுப்பதிவு தினத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ