போராடிய டாஸ்மாக் ஊழியர் 203 பேர் கைது
பவானி; சித்தோடு அருகே சூரியம்பாளையத்தில் உள்ள ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவகம் முன், டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் நான்காவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. அனு-மதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 203 பேரை சித்தோடு போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதனால் லட்சுமிநகர், காடையாம்பட்டி, கவுந்தப்பாடி பகுதிகளில், தனியார் மதுபார்களில் கூட்டம் அலை மோதியது.