உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 232 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 232 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 232 மனு ஏற்கப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்து, 96 சதவீத மாணவ, மாணவியரை உயர் கல்விக்கு வழிகாட்டிய கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அன்பரசு, உட்பட சிலர் கவுரவிக்கப்பட்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை