உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எலந்தகுட்டை மேட்டில் 23.80 மி.மீ., மழை

எலந்தகுட்டை மேட்டில் 23.80 மி.மீ., மழை

ஈரோடு:தென்மேற்கு பருவ மழை காலமான தற்போது, ஈரோடு மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீன் பிடி தொழில் செய்வோர், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எலந்தகுட்டை மேட்டில் அதிகபட்சமாக, 23.80 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பவானியின்-19 மி.மீ., கவுந்தப்பாடி-20, கோபி-8.20, நம்பியூரில்-2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மழைக்கு அந்தியூரில் ஒரு குடிசை வீடு முற்றிலும் சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி