கொங்கு கலை கல்லுாரியில் 27-வது பட்டமளிப்பு விழா
ஈரோடு: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லுாரியின், 27வது பட்டம-ளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் ஆ.கிருஷ்ணன் கலந்து கொண்டார். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் தரவரிசையில் சிறப்-பிடம் பெற்ற, 73 மாணவர்களுக்கு பதக்கத்துடன் பட்டமும், 1,208 மாணவர்களுக்கு பட்டம் என, 1,281 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார். விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லுாரி அறக்கட்-டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொரு-ளாளர் ரவிசங்கர், கொங்கு கலை கல்லுாரி தாளாளர் தங்கவேல், கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவராஜா, கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்லுாரி அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் பழனிசாமி, கே.செங்கோட்டுவேலன் மற்றும் கல்லுாரி முதல்வர் வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.