உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது

கஞ்சா செடி வளர்த்த 3 பேர் கைது

அந்தியூர்:கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில், கோபி மதுவிலக்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தாமரைக்கரை மேற்கு மலை ஒன்னகரையில் ஜடே கவுடர், 60, அவரது மகன் கெம்பன், 45, ஆகியோர் வீட்டருகே, ஆறு கஞ்சா செடி வளர்வது தெரிய வந்தது. செடிகளை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் வைத்திருந்த, 100 கிராம் உலர் செடியை கைப்பற்றினர். இருவரையும் கைது செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல் பர்கூர்மலை சோளகனையில் ராகி பயிரில் ஊடுபயிராக கஞ்சா வளர்த்த ஈரய்யனை, 55, பர்கூர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை