3 லட்சம் லிட்டர் குடிநீர் முத்துாரில் தினமும் வீண்
காங்கேயம் ஊதிருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், மூலனுார், தாராபுரம், குண்டடம், காங்கேயம், சென்னிமலை யூனியன்களில், 1,262 ஊரக குடியிருப்புக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில், காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தரமின்றி பணி நடந்ததால், குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது.தற்போது முத்துாரில் இருந்து வெள்ளகோவிலுக்கு செல்லும் பிரதான குழாயில், முத்துாரில் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.இரு மாதங்களாக சரி செய்யப்படாததால், தினமும் பல மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் வெள்ளகோவில் ஒன்றியம், நகராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் குறைவாக செல்கிறது.தகவல் தெரிவித்தும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.