மேலும் செய்திகள்
22 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில ஆசாமிகள் கைது
25-Jul-2026
ஈரோடு:ஈரோடு டவுன் போலீசார், ஈரோடு ஜீவானந்தம் சாலை குயவன் திட்டு பகுதியில், நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 38, 32 வயது ஆசாமிகள் என்பது தெரிந்தது. அவர்களிடம் சோதனை செய்ததில், 22 கிலோ கஞ்சா இருந்தது. விற்பனை செய்ய கடத்தி வந்ததாக கூறினர். இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈரோடு தாலுகா போலீசில், கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, 29 வயது வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.
25-Jul-2026