மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் 2 பேர் கைது
05-Aug-2026
ஈரோடு:அறச்சலுார் போலீசார் பழையகோட்டை செக்போஸ்ட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த மூவரிடம் சோதனை செய்தனர். அதில் சாக்குப்பை இருந்தது.அதில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் திருப்பூர் சிறு பூலப்பட்டி மாஸ்கோ நகர் அழகர்சாமி, 41; புதுக்கோட்டை திருநல்லுார் தங்கநிலா, 42; திருப்பூர் வேலம்பாளையம் நாகராஜ், 46, என தெரிந்தது. மூவரையும் கைது செய்து, கஞ்சாவுடன் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
05-Aug-2026