மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஏற்படுத்த மாதிரி ஓட்டுப்பதிவு
13-Jan-2026
ஈரோடு: விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்காக மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 30 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர உள்ள நிலையில், மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்-னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'பெல்' நிறுவன பொறியா-ளர்கள் மூலம் பழுது நீக்கம் செய்து, அதில் உள்ள பதிவுகளை அகற்றி, தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு தயார் செய்து வைத்துள்ளனர்.ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்-திரங்கள்-5,777, கட்டுப்பாட்டு இயந்திரம்-3,582, வி.வி.பேட்-3,627 என இருப்பில் உள்ளன. இவற்றை முதல் நிலை பராமரிப்பு செய்து, பழுதானவை நீங்கலாக மற்ற இயந்தி-ரங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இவற்றில் தலா, 30 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்-டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவற்றை, மாவட்-டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் என, 8 சட்-டசபை தொகுதிக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவ-லரின் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஈரோடு மேற்கு தொகுதிக்கும், மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பாது-காப்பாக வைத்தனர்.தேர்தல் அறிவிப்பு வெளியானதும், இவற்றை மீண்டும் ஆய்வு செய்து, மக்கள் கூடும் இடங்கள், கல்லுாரிகள், ஓட்டுச்சாவடி மைய பகுதிகளில் மாதிரி ஓட்டுப்பதிவுக்கு அனுமதிக்க உள்ளனர்.தவிர, 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வுக்காகவும், புதிய வாக்காளர்கள் ஓட்டுப்பதிவை அறியவும், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த உள்ளனர்.
13-Jan-2026