உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரத்தான் போட்டியில் 300 வீரர்கள் பங்கேற்பு

மாரத்தான் போட்டியில் 300 வீரர்கள் பங்கேற்பு

ஈரோடு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, மாரத்தான் போட்டி ஈரோட்டில் நேற்று நடந்தது. 17 வயது முதல் 15 வயதுடைய பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம், 25 வயதுக்கு அதிகமானோருக்கு, 8 கி.மீ., துாரம், ஓபன் போட்டி, 10 கி.மீ., என பல்வேறு பிரிவுகளில் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதலிடம் பிடித்தவருக்கு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,000 ரூபாய் மற்றும் பத்து பேருக்கு தலா 1,000 ரூபாய் பரிசளிக்கப்பட்டதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் திவ்ய நாகேஸ்வரிதெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !