மொபைல்போன் பறித்த 4 பேர் கைது
ஈரோடு:பீகார் மாநிலத்தை சேர்ந்த இரு வாலிபர்கள், நேற்று முன்தினம் இரவு, 9:45 மணியளவில் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்து சென்றனர். ஸ்டோனி பிரிட்ஜ் அசோகபுரி ஓடைபள்ளம் பாலத்தில் சென்றபோது நான்கு பேர் வழிமறித்து ஆயுதங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லாததால் இருவரின் மொபைல்போனை பறித்து தப்பினர். டவுன் டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீசார் விசாரித்தனர். கும்பலை பிடிக்க தீவிரம் காட்டினர்.
Galleryஇதில் ஈரோடு மரப்பாலம் கிருஷ்ணமூர்த்தி, 24; ஓடைபள்ளம் அசோகபுரி மீன் கடை காளியப்பன், 24, அசோகபுரி பெரியார் நகர் வசந்த், 23; நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிலோன் காலனி நவீன்குமார், 26, என்பது தெரிந்தது. நான்கு பேரும் கூலி தொழிலாளிகள். வழிப்பறிக்கு நவீன்குமார் மூளையாக இருந்து செயல்பட்டது தெரியவந்தது. நான்கு பேரையும் டவுன் போலீசார் கைது செய்தனர். நான்கு பேர் மீதும் போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.