உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

தொழிலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

பெருந்துறை, பெருந்துறை சுள்ளிபாளையம் ஐயப்பா நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 44, கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். எட்டு மாதங்களுக்கு முன் சொந்தமாக வீடு கட்டி வசிக்கின்றனர். இது புதிதாக உருவாகி வரும் குடியிருப்பு பகுதியாகும்.மனைவி, மூத்த பெண்ணுக்கு சில தினங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டது. ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் மனைவியை சேர்த்துள்ளார். மகள்கள் சீனாபுரத்தில் உறவினர் வீட்டில் உள்ளனர். அவ்வப்போது பரமேஸ்ரவன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். கடந்த, 7ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர், 9ம் தேதி வந்தார். முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த நான்கு பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. அவர் புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை