உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 430 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 430 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, போலீஸ் நடவடிக்கை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 430 மனுக்கள் பெறப்பட்டு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு எதிர்பாராத விபத்துக்களில் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்கள், 6 பேருக்கு வருவாய் துறை சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா, 1 லட்சம் ரூபாய் வீதம், 6 லட்சம் ரூபாயை காசோலையாக டி.ஆர்.ஓ., சாந்தகுமார் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை