கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4,300 வீடு
ஈரோடு, செப். 28-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.இதில் விவசாயிகள் பேசியதாவது: கீழ்பவானி வாய்காலில் போதிய தண்ணீர் வரத்தில்லை. கீழ்பவானி சீரமைப்பு பணியில் கிளை, கொப்பு வாய்க்கால்கள் சேதமடைந்ததை சீரமைக்க வேண்டும். பவானிசாகர் அணையில் தண்ணீர் திறந்து, 58 நாளாகியும், மேட்டூர் வலது கரை பாசனத்தில் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. எருமை பால் ஒரு லிட்டர், 100 ரூபாய்க்கு விற்கும் நிலையில் ஆவினில் விலையை உயர்த்தாததால், ஆவினுக்கு பால் வழங்க மறுக்கின்றனர். மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும். இவ்வாறு பேசினர்.கலெக்டர் பேசியதாவது: மாவட்டத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில், 4,300 வீடுகளுக்கு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. குடிசை வீட்டில் வசிப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தாமரைக்கரை - தலமலை, தம்புரெட்டி, ஒன்னகரை, ராமரணை என, ஏழு சாலைகள் வனப்பகுதியில் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. கொங்காடை சாலை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.