உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுபள்ளத்தில் 44 மி.மீ., மழை

வரட்டுபள்ளத்தில் 44 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால் அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக, வரட்டுபள்ளத்தில், ௪௪.௮௦ மி..மீ., மழை பதிவாகியுள்ளது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-16, கவுந்தப்பாடி-2, கோபி-3.10 கொடிவேரி-3.80, குண்டேரிபள்ளம் அணை-1.60, சத்தி-15.40, பவானிசாகர் அணை-12.60. மழைக்கு சத்தியில் ஒரு கான்கிரீட் வீடு சேதமடைந்தது.பவானியில் மழைபவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை முதலே வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. மதியம் லேசான மேகமூட்டம் ஏற்பட்ட நிலையில், ஒரிச்சேரி, ஒரிச்சேரிப்புதுார், தளவாய்பேட்டை, ஆப்பக்கூடல், பெரியமோளபாளையம், வைரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 2:30 மணி முதல் 3:00 மணி வரை கனமழை பெய்தது.*பர்கூர் மலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே இரு இடங்களில் நேற்று சிறிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி