உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எஸ்.பி., அலுவலகத்தில் 44 மரங்கள் மூன்று கட்டடம் விரைவில் அகற்றம்

எஸ்.பி., அலுவலகத்தில் 44 மரங்கள் மூன்று கட்டடம் விரைவில் அகற்றம்

ஈரோடு, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், போதிய இடவசதி இல்லை. கூடுதல் கட்டடம் கட்ட பல ஆண்டாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், 15 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அரசு அறிவித்தது. இதை போலீஸ் வீட்டு வசதி கழக டி.ஜி.பி.,யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், 10 கோடி மதிப்பில் கட்ட உத்தரவிட்டார். இதையடுத்து புதிய கட்டடம் கட்ட சென்னையில் ஏலம் விடப்பட்டது.இதில் முதற்கட்டமாக ஏற்கனவே உள்ள மூன்று கட்டடங்கள், ஒரு கோவில், 44 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பொது ஏலம் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 10 பேர் பங்கேற்றனர். இதில் கட்டடத்தை இடித்து அகற்ற, 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலதாரர்கள் ஒப்பு கொண்டனர். இதேபோல், 44 மரங்களை வெட்டி அகற்றும் ஏலமும் நடந்தது. மரங்கள், கட்டடங்களையும் இடித்து அகற்றும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை