பெருந்துறையில் 48 மி.மீ., மழை
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் பெருந்துறையில் அதிகபட்சமாக 48 மி.மீ மழை பெய்தது,நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-7.20, மொடக்குறிச்சி-5, கொடுமுடி-7, சென்னிமலை-38, பவானி-1, கவுந்தப்பாடி-8,அம்மாபேட்டை-9.60, வரட்டுபள்ளம் அணை-1.20, கோபி-12.20, எலந்தகுட்டைமேடு-1, பவானிசாகர் அணை-29.80, தாளவாடி-11.40. மழைக்கு கோபியில் ஒரு குடிசை வீடு, இரண்டு கான்கிரீட் வீடு சேதமடைந்ததாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.* ஈரோடு மாநகரில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தொடங்கிய சாரல் மழை இடைவெளி விட்டுவிட்டு, 3:30 மணி வரை தலைகாட்டியது. காலை, 9:45 மணிக்கு இரண்டாவது இன்னிங்சை விட்ட இடத்தில் இருந்தே தொடங்கியது. ஆனால், 15 நிமிடத்தில் ஓய்ந்து விட்டது. அதேசமயம் பல இடங்களில், 10:00 மணிக்கு பிறகும் பனிமூட்டம் காணப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மீண்டும் பெய்த சாரல், 20 நிமிடங்களில் நின்று விட்டது. மொத்தத்தில் சாரல் மழையால், மாநகரில் நேற்று இதமான சூழல் நிலவியது.