மேலும் செய்திகள்
கரூர் சுற்று வட்டாரத்தில் மஞ்சள் சாகுபடி அமோகம்
27-Sep-2025
ஈரோடு, ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு, கோபி சொசைட்டி என, 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.தீபாவளி பண்டிகைக்காக ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு வரும், 20 முதல், 22 வரை, மூன்று நாட்கள் விடுமுறை அளிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை சேர்த்தால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையாகிறது. வரும், 23ம் தேதி வழக்கம்போல அனைத்து மஞ்சள் ஏலங்களிலும் வணிகர்கள் கலந்து கொள்வார்கள். இத்தகவலை ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
27-Sep-2025